ரணில் விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விளக்கமறியல்
மேலும், விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் கோரினார்.
சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.
சாட்சியங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, சந்தேக நபரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
