ரணிலின் கைது திட்டமிட்ட செயலா ? சஜித் கேள்வி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.08.2025) கைது செய்யப்படுவதற்கு முன்பே, இலங்கையைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அவர் கைது செய்யப்படுவார் என்று கணித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கைது
இது தொடர்பில் குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“அப்பதிவில் யூடியூபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைதுசெய்யப்படுவார் என்பது நடப்பதற்கு முன்னமே எதிர்வு கூறுவது? இது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது,
A YouTuber predicting the arrest of a former President before it even happens? That can’t be a coincidence, could it be planned? If true, it’s a sad day when something as sacred as law and order is reduced to cheap theatrics.
— Sajith Premadasa (@sajithpremadasa) August 22, 2025
இது ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அமைந்திருக்க முடியுமா? அது உண்மையாக இருந்தால், சட்டம் ஒழுங்கு போன்ற உன்னதமானதொரு விடயம் நாடகக் காட்சியாக மாறும் அந்நாள் மோசமானதொரு நாளாகும். என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
