ரணிலை காண நீதிமன்றுக்கு விரைந்த மைத்திரி..!
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
திலீப பீரிஸ்
குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விசாரணை முழுமையடையாததால் சந்தேக நபரை காவலில் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
பின்னர் பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரம் ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
