தவறான பயணத்தில் தேசிய மக்கள் சக்தி அரசு: முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு
Dinesh Gunawardena
NPP Government
By Sumithiran
மக்கள் கவலையில் உள்ளனர். வாழ்க்கைச் சுமை அதிகரித்திருக்கின்றது. அரசின் பயணம் தவறு என்பதையே இது வெளிப்படுத்துகின்றது என்று முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena) குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தவறான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.”
எனது அரசியல் பயணம்
எனது அரசியல் பயணம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இறுதி மூச்சு இருக்கும்வரை அரசியல்வாதிகளால், அரசியலை விட்டு செல்ல முடியாது. அவ்வாறு செல்வோம் எனக் கூறுவது பொய்.
எதிரணிகளின் வேலைத்திட்டம் என்னவென்பது பற்றி அவதானித்துக்கொண்டிருக்கின்றேன்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
