விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகரின் மனைவி: வைத்தியசாலையில் அனுமதி!
முன்னாள் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வலவின் மனைவி வைத்தியர் இந்திராணி ரன்வல ஓட்டிச் சென்ற கார் இன்று (17.01.2026) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன்படி, குறித்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் முன்னாள் சபாநாயகரின் மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பியகம காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் இலங்கையின் பிரபல இசைக் குழுவொன்றின் முன்னணி கிட்டார் வாத்திய கலைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து
களனி-பியகம வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வீட்டின் முன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பண்டாரவத்த பகுதியில் இருந்து வீதியின் வலது பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி ஓட்டிச் சென்ற கார், மீது களனியிலிருந்து பண்டாரவத்த நோக்கிச் சென்ற கார் மோதிய இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மது போதையில் இருந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவும் அண்மையில் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |