கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கையின் முன்னாள் நீதிபதியும் போட்டி
election
srilankan
canad
former judge
By Sumithiran
கனடாவில் எதிர்வரும் 20 ஆம் தகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இலங்கையின் முன்னாள் நீதிபதி மற்றும் சட்டத்தரணியும் போட்டியிடவுள்ளார்.
தர்மசேன யகண்டவெல என்ற முன்னாள் நீதிபதியே போட்டியிட உள்ளவர் ஆவார்.
அவர் பொதுத் தேர்தலில் NDP ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் அபோட்ஸ்ஃபோர்ட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடன் சேர்த்து 5 வேட்பாளர்கள் அந்த இடத்திற்கு போட்டியிடுகின்றனர். தர்மசேன யகண்டவெல கனேடிய குடிவரவு வழக்கறிஞர்.
அவர் இதுவரை சுமார் 5,000 குடும்பங்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி கனடாவில் நிரந்தரமாக குடியேற உதவினார் என்கிறார். "அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி." என அவர் தெரிவித்துள்ளார்.