திட்டமிடப்பட்டு தமிழரசுக் கட்சியின் கைபொம்மையாக்கப்பட்ட மாவை !
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் திடீர் மறைவு தற்போது தமிழ் அரசியல் களத்தில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகயீனம் காரணமாக கடந்த 28 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா, 29 ஆம் திகதி தனது 82 ஆவது வயதில் உயிரிழந்தார்.
இந்தநிலையில், இவரது இழப்பு குறித்து தொடர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இதற்கு அரசியல் ரீதியான மன அழுத்தமும் காரணமென ஒரு தரப்பினர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
தமிழரசுக் கட்சியின் உள்ளக சிக்கல்கள் காரணமான அரசியல் அழுத்தங்கள் மற்றும் தொடர் சர்ச்சைகளினால் மனதளவில் அவர் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டமையும் மாவை சேனாதிராஜாவின் இழப்பிற்கு முக்கிய காரணமென சமூக ஊடகங்களில் இருந்து தென்னிலங்கை ஊடகம் வரை பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், இதன் காரணமாகத்தான் மாவையின் உறவினர்களும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களையும் மற்றும் சில தலைமைகளையும் மாவையின் இறுதி கிரிகைகளில் கூட கலந்துகொள்ள கூடாது என எச்சரித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், மாவையின் மரண வீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றும், மட்டக்களப்பில் இருந்து யாராவது செல்லவிரும்பினால் அற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையினருக்கு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது சமூக வலைதளத்தில் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
சுமந்திரன், மாவைக்கு வெளியிட்டுள்ள முகப்புத்தக இரங்கல் பதிவில் கருத்து வெளியிடும் பகுதியை (Comment Section) வரையறுத்துள்ள நிலையில் தங்களுக்கு தேவையானவர்களை தவிர வேறு எந்த ஒரு நபரின் கருத்துக்களையும் தவிர்த்து கொள்ள அவர் முற்படுவது வெட்ட வெளிச்சமாக புலப்படுகின்றது.
இவ்வாறான சில விடயங்களை உற்று நோக்கும் போது ஒரு வேளை மாவையின் உறவினர்களின் எச்சரிக்கை இவர்களுக்காக தானோ எனவும் ஒரு தரப்பினர் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவருக்கு மரியாதை வழங்காப்படாமை, உள்ளக கட்சி மோதல், தலைவர் போட்டி மற்றும் தனிநபர் சுயநலம் என அவரவர் விருப்பிற்கு கைப்பாவையாக மாவையை உருட்டி விளையாடியதும் அணைவரும் அறிந்ததே.
காரணம், பொதுத்தேர்தலின் பின்னர் முதல் முறையாக இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கூட்டத்திற்கு வருவதற்கு தாமதமாகிய நிலையில், அவர் வந்த பின்பு கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் கோரப்பட்டிருந்தது.
இருப்பினும், என்னத்தான் இருந்தாலும் கட்சியின் தலைவர் என்பதை மறந்து அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடத்த முடியாது எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சியின் தலைவரை அவமதிப்பது குறித்தும் கட்சியின் மூத்த தலைமையை மதிக்காமை குறித்தும் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த சாணக்கியனும் அதனை பொருட்படுத்தாத நிலையில், கேள்வியெழுப்பிய ஊடகங்களையும் முட்டாள் ஊடகங்கள் என கருத்து தெரிவித்திருந்தமை அறிந்ததே.
தமிழரசுக் கட்சியில் சிலருக்கு மற்றவர்கள் மீதான விமர்சனங்களை முன்வைக்க இருக்கும் தைரியம் தம்மை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வருவதில்லை.
இவ்வாறன சூழ்நிலைதான் தற்போதும் இடம்பெற்றுள்ளது காரணம், மாவையின் இறப்பிற்கு தென்னிலங்கை ஊடகங்கள் காட்டிய ஈடுபாட்டில் துளி அளவில் கூட தமிழரசுக் கட்சியில் சிலர் காட்டவில்லை என சமூக ஊடகங்கள் நகையாடுகின்றன.
யாருக்கு தெரியும், ஒருவேளை இனி வரும் காலங்களில் அவர்கள் மாவையின் இறப்பை பொருட்படுத்தாமல் அதையும் தமது அரசியல் சுய இலாபத்திற்கும், அனுதாபங்களுக்கும் உபயோகிக்கலாம், அவ்வாறு இருந்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
மாவையின் இறப்பின் மீதான ஈடுபாடையும் தாண்டி தமிழரசுக் கட்சியில் சிலரின் சிறு பிள்ளை தனமான சுயலாப அரசியலே இங்கு பேசுப்பொருளாக மாறியுள்ளது, இருப்பினும் இதையும் தூசு போல தட்டிவிடும் அரசியல் களம்தான் தமிழ் அரசியல் களமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
விமர்சனங்களுக்கு அப்பால் மாவையின் இறப்பு தமிழ் அரசியல் களத்திற்கு பாரிய இழப்பு என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை, இவ்வளையும் தாண்டி இனி வரும் காலங்களில் சரி தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்காக என்ன செய்யபோகின்றது என்பது பாரிய கேள்வியாக தமிழ் மக்களிடையே வேரூன்றியுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |