பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்
பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கமரூன் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் பிரதமராக பணியாற்றிய நிலையில் பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
வழக்கத்துக்கு மாறானது
தற்போது பிரித்தானியாவின் பிரதமராகவுள்ள ரிஷி சுனக் தனது உயர்மட்ட குழுவை மாற்றியமைத்துள்ள நிலையில் 57 வயதான டேவிட் கமரூன் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
இந்த நியமனம் வழக்கத்துக்கு மாறானது என்றும் பிரித்தானிய வரலாற்றிலேயே முன்னாள் பிரதமர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்
"பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக் என்னிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்கும் படி கேட்டுக்கொண்டார், அந்த கோரிக்கையினை நான் மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்,
The Prime Minister has asked me to serve as his Foreign Secretary and I have gladly accepted.
— David Cameron (@David_Cameron) November 13, 2023
We are facing a daunting set of international challenges, including the war in Ukraine and the crisis in the Middle East. At this time of profound global change, it has rarely been more…
ஏனென்றால், இப்போது பிரித்தானியா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது ரஷ்யா உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளின் செயற்பாடுகளால் ஏற்படும் நெருக்கடிகள் என பல்வேறு பிரச்சினைகளால் பிரித்தானியாவும் பாதிக்கப்படுகிறது,
இவ்வாறான ஒரு நெருக்கடியான நிலையில் நான் நாட்டுக்காக இந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன், நான் 6 வருடங்கள் பிரதமராக பணியாற்றி இருக்கிறேன் எனது அனுபவங்களின் வாயிலாக நிச்சயம் என் பணிகளை சிறப்பாக ஆற்றுவேன்" என தனது வெளியுறவுத்துறை அமைச்சு பதவி தொடர்பாக டேவிட் கமரூன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.