புளோரிடாவிற்கு பறந்த டொனால்ட் டிரம்ப் - வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றிலிருந்து வெளியேறி சிறப்பு விமானத்தில் புளோரிடா பயணமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணைகள் டிசம்பர் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஆபாசப்பட நடிகைக்கு தேர்தல் நிதியினை வழங்கிய குற்றச்சாட்டில் டிரம்ப் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
34 குற்றச்சாட்டுக்கள்
இதேவேளை,டொனால்ட் டிரம்ப் எதிரான 34 குற்றச்சாட்டுகளையும் உள்ளடக்கி முத்திரையிடப்பட்ட குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் என்ற பெயரை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.
