புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிம்பாப்வே கிரிக்கெட் வீரர் உயிர் பிரிந்தது
Zimbabwe national cricket team
By Sumithiran
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக அவரது மனைவி உறுதி செய்துள்ளார்.
நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) காலை உயிரிழந்ததாக அவரது மனைவி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
வீட்டில் இருந்து தேவதூதர்களுடன் இருக்க
இன்று அதிகாலையில், என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பு மற்றும் என் அழகான குழந்தைகளின் தந்தை, தனது வீட்டில் இருந்து தேவதூதர்களுடன் இருக்க அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
இறக்கும் போது அவருக்கு 49 வயது.
நோய்வாய்ப்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக் சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அது பொய் என்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்த நிலையில் இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 21 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்