யாழில் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழா
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பழைய பூங்கப் பகுதியில் விளையாட்டரங்கை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.
அமைச்சர்கள், வடக்கு ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
விளையாட்டு வீரர்கள் கௌரவிப்பு
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் தெற்காசிய ரீதியில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கு விருந்தினர்களால் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதன்போது சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |