பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மாலைதீவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதால், 4 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் அமைச்சர்கள்
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாதுகாப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாலைதீவு (Maldives) ஜனாதிபதி முகமது முகிதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைதீவுக்கு இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, அநுரகுமார மாலைதீவு ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளவுள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு புலனாய்வு கோப்பில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தகவல்கள்: சி.ஐ.டி அறிக்கை அதிர்ச்சி தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
