323 கொள்கலன் சர்ச்சையை கண்டுபிடிக்கும் பணியில் நான்கு எதிர்கட்சியினர்
சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பான சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு நான்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவின் எதிர்க்கட்சி பிரதிநிதிகளாக அஜித் பி பெரேரா, முஜிபுர் ரகுமான், தயாசிறி ஜயசேகர மற்றும் சானக்கியன் ராசமாணிக்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தால் நேற்று (11) பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்டதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம்
இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க தொடர்புடைய நாடாளுமன்ற சிறப்புக் குழு உடனடியாக நியமிக்கப்படும் என்றும், அதன் விசாரணை மிக விரைவில் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நாடாளுமன்ற சிறப்புக் குழுவிற்கு ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |