காணாமற்போன ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் தொடர்பில் வெளியான தகவல் ( புதிய இணைப்பு)
மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்று சென்று காணாமல் போயிருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (18) மீன்பிடிக்கச் சென்ற குழுவினரின் படகு ஒன்று இன்று (19) அதிகாலை சுழலில் சிக்கி விபத்திற்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் படகில் இருந்த நான்கு பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த படகில் 06 பேர் பயணித்துள்ளதுடன், முஹூதுகட்டுவவிற்கு அண்மித்த பகுதியில் படகு காணாமல் போயிருந்தது.
சுற்றுலா வந்த ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் படகு கவிழ்ந்து மாயம்
ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் கடலுக்கு படகில் சென்ற நிலையில் படகு கவிழ்ந்ததில் குறித்த நால்வரும் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் நேற்றுமாலை(18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இன்று(19) அதிகாலை இது தொடர்பாக காவல்துறைக்கு அறிவக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மீன் பிடிக்கும்போது கவிழ்ந்தது படகு
நேற்று 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் சிறிய டிங்கி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். மீன்பிடிக்கும்போது மழை பெய்ததால் படகு கடலில் கவிழ்ந்துள்ளது.
படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி வந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
நான்கு பேரை காணவில்லை
எனினும், இதன்போது படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மாரவில காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிழக்கு ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படும் செந்தில் தொண்டமான்! சிங்கள பத்திரிகையின் பரபரப்பு தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |