சட்டவிரோத மீன்பிடி - முல்லைத்தீவில் நான்கு கடற்தொழிலாளர்கள் கைது
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக சிறிலங்கா கடற்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைதீவு மாவட்டத்தில் பல ஆண்டுகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக கடற்தொழிலாளர்களின் பிரச்சினை காணப்படுகின்றது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல் பரப்புகளில் அதிகரித்துள்ள சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படையினரின் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து மூன்று படகிகனையும் வெளிச்சம் பாச்சி மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த நான்கு நபர்களும் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளினால் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த வழக்கு ஒன்பதாம் மாதம் முதலாம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 21 மணி நேரம் முன்