ஹமாஸ் அதிரடி : இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில்(gaza) இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் நான்கு படையினர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல்(israel) படைத்தரப்பு அறிவித்துள்ளது.
காசாவின் வடக்கு பகுதியில் நேற்று(11) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட படை வீரர்கள் அனைவரும் கஃபிர் படைப்பிரிவின் ஷிம்ஷோன் பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நால்வர் உயிரிழப்பு
தாக்குதலில் உயிரிழந்த நால்வரில் இருவர் 21 வயதுடையவர் என்பதுடன் மற்றைய இருவரும் 20 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் மரணத்துடன் காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலில் இஸ்ரேல் படைவீரர்களின் இழப்பு எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி