மலேசியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தான நபர்கள்!
CID - Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Malaysia
By Dhilak
மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக கும்பலைச் சேர்ந்தத மூன்று உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், இன்று பிற்பகல் (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ஒலுகல உள்ளிட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழு, சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்துவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டுகள் பதிவு
இந்த சந்தேக நபர்களில் ஒருவர், பிரபல பாதாள உலக குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பல கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இந்தக் குழு மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி