யாழ்ப்பாணத்தில் நான்கு இளைஞர்கள் கைது
Sri Lanka Police
Jaffna
Drugs
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் 200 மில்லி கிராம், கஞ்சா ஆயிரத்து 400 மில்லிகிராம் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த இருவர், புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த இருவர் என 20 முதல் 30 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
காவல்துறை புலனாய்வு பிரிவினர்

யாழ். பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர்கள் கோப்பாய் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்