யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
யாழ். (Jaffna) நெடுந்தீவில் 150 கிலோ கிராம் கஞ்சாவுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (29.08.2025) ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று (29) ஒரு படகுடன் 150 கிலோ கிராம் கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
இவர்களில் மூவர் ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யபட்டவர்கள் மற்றும் கஞ்சா என்பன நெடுந்தீவு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

