சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு எதிராக மனுத்தாக்கல்! ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை
காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) நியமிக்கட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு இன்று (19) உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கபட்டதை எதிர்த்து எட்டு அடிப்படை உரிமை மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.
மனுத்தாக்கல்
கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் (Malcom Ranjith) ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவி ஹிருணிக்கா பிரேமசந்திர (Hirunika Premchandra), பேராசிரியர் சாவித்ரி குணசேகர (Savitri Gunasekara) உள்ளிட்ட எட்டு பேரால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் சரிவர பணியாற்ற தவறியள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்களையும் எதிர்வரும் ஜுலை மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ள உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |