ஐ.எஸ் அமைப்பின் தலைவரை வேட்டையாடியது பிரான்ஸ்
killed
is leadr
france forces
By Sumithiran
ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் தலைவனை பிரெஞ்சு படைகள் சஹாராவில் சுட்டுக் கொன்றதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
அத்னான் அபு வாலித் அல் சஹராவி என்று பெயருள்ள ஐ.எஸ். இயக்கத்தின் தலைவன் மேற்கு ஆபிரிக்காவின் சாஹேல் பகுதியில் தலைவனாக செயற்பட்டு வந்தவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் தலைமையிலான ஐ.எஸ் குழுவினர் அமெரிக்க வீரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது. 6 பிரான்ஸ் வீரர்களையும் அவர்களின் நைஜீரிய நாட்டு கார் சாரதியையும் தானே சுட்டுக் கொன்றார்.