132 பேரின் உயிரை பறித்த பரிஸ் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து பத்தாண்டுகள்
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியான 132 பேரின் பத்தாண்டு நினைவு அஞ்சலிநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
2015 இல் இன்றைய நாளான நவம்பர் 13 இடம்பெற்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் 132 பேர் பலியாகிருந்தனர்.
ஐ. எஸ் எனப்படும் இஸ்லாமிய ஜிகாதிகளால் நடத்தபட்ட இந்த தாக்குதல்களில் படக்லான் அரங்கு, உணவுவிடுதிகள் ஸ்ரற் து பிரான்ஸ் எனப்படும் பெரு மைதானப்பகுதியில் ஆகியவற்றில் 132 பலியாகி 400க்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்திருந்தனர்.
மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகள்
அன்றையநாளில் துப்பாக்கித்தாக்குதல்கள் குண்டுத்தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள், இடம்பெற்றன.

மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளும், ஆறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு நிகவுகளும் நடந்தால் அன்று பரிஸ் நகரம் உலுக்கமடைந்திருந்தது.
இந்த தாக்குதலில் பட்டக்கிளான் நாடக அரங்கில் இடம்பெற்ற கலை நிகழ்சியை பார்வையிட்ட மக்களில் 89 பேர் கொல்லப்பட்டனர 342 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய எட்டு தாக்குலாளிகளும் கொல்லப்பட்ட பின்னர் நாடு முழுவதும் அவசரகால நிலைமை பிறப்பிக்கட்துடன் 1944 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக பரிஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டடிருந்தது.
10 ஆண்டுகள்
இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் இன்று கடக்கும் நிலையில் தாக்குதலில் பலியானவர்களை நினைவு கூர்ந்து இன்று பல நினைவு நிகழ்வுகள் நடத்தபட்டுவருகின்றன.
இந்நிலையில் முதலாவது நிகழ்வு ஸ்ரற் து பிரான்ஸ் எனப்படும் பெரு மைதானப்பகுதியில் இன்று பகல் நடத்தபட்டது முக்கிய நிகழ்வு இன்று மாலை பரிஸ் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |