அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன.
குறித்த கூட்டமானது இன்று (13.12.2025) வியாழக்கிழமை மாலை இணைய வழியில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
வரவு – செலவுத் திட்டம்
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா அல்லது நடுநிலை வகிப்பதா என்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சி இன்று எடுக்கும் முடிவை நாளை நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு சமர்ப்பிக்கும் வரவு – செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கும் தீர்மானத்தைக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இணைய வழியில் கூடி இறுதி செய்ய வேண்டும் என அண்மையில் வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருந்தமை தெரிந்ததே.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |