இலங்கை மக்களுக்கு காவல்துறையினரின் விசேட எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள காவல்துறை ஊடகப்பிரிவில் இன்று (11.11.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொதுமக்கள் இதன்போது கடைபிடிக்க வேண்டிய பல விடயங்கள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.
எச்சரிக்கை
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், “உங்கள் வீட்டை சோதனை செய்வதற்காக பகல் அல்லது இரவு நேரங்களில் நீங்கள் அறியாத யார் வருகைத் தந்தாலும் வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம்.

இன்றைய காலத்தில் காவல்துறை என்ற போர்வையில் போலியாக வேடமணிந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக உங்கள் வீட்டுக்கு வரக் கூடும். அப்போது உங்கள் பிரதேச காவல் நிலையத்தின் தொலைபேசி எண் அல்லது பொறுப்பாதிகாரியின் தொலைபேசிக்கு அறியத்தரவும் அல்லது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
ஒவ்வொறு காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் அவர்களின் அடையாளத்தை உறுத்திப்படுத்திக் கொள்ளலாம்.
போதைப்பொருள் கையிருப்பு
இவ்வாண்டில் இதுவரையில் ஹெரோயின் 1493 கிலோகிராம், கஞ்சா 15,500 கிலோகிராம்,கொக்கேன் 32 கிலோகிராம், ஹஸீஸ் 604 கிலோகிராம், ஐஸ் 2554 கிலோகிராம் , நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

'முழு நாடுமே ஒன்றாக'வேலைத்திட்டத்தில் ஒரு வாரத்தினுள் ஹெரோயின்108 கிலோகிராம், கஞ்சா 388 கிலோகிராம், ஹஸீஸ் 25 கிலோகிராம், ஐஸ் 268 கிலோகிராம், குஸ் 4 கிலோகிராம் மற்றும் போதை மாத்திரைகள் 4,400 உடன் 13,490 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 299 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு பொது மக்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் உங்கள் பகுதி காவல் நிலையத்திற்கு அறித்தருமாறும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |