பிரான்ஸில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்
பிரான்ஸில் (France) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் Carte de Résident de 10 ans, La Carte de Résident Longue Durée -UE மற்றும் the Carte de Résident Permanent என மூன்று வகையான நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இவை ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகளாகும்.
புதுப்பித்தல்
அத்துடன், இந்த அனுமதி அட்டைகள் வைத்திருப்போர், தொழில் புரிபவராக இருந்தாலும் தொழில் புரியாதவராக இருந்தாலும் பிரான்சில் வாழ்வதற்கு இந்த அட்டைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இருப்பினும், இந்த அட்டைகள் காலாவதியாவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன் அவற்றை புதுப்பித்தல் அவசியமாகும்.
சட்ட நடவடிக்கை
அவ்வாறு புதுப்பிக்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 180 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டையானது காலாவதியாகும் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |