பிரான்சில் சாதித்துக் காட்டிய இலங்கைப் பெண்! குவியும் பாராட்டுக்கள்
இலங்கையில் பிறந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்து தற்போது பிரான்சில் வாழும் பெண்ணொருவர் அங்கு ஒரு இடத்தை வாங்கி அதை ஆண்டுக் கணக்கில் கஷ்டப்பட்டு சீரமைத்து புதுபித்துள்ள நிலையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
எனாஷா (Enasha) (வயது-51) வயதான பெண் இலங்கையில் பிறந்தார். தனது 2ஆவது வயதில் பிரித்தானியாவுக்கு அவர் குடிபெயர்ந்தார். அங்கு லண்டன் மற்றும் கெண்டில் வளர்ந்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பிரான்சில் உள்ள Sarlat-la-Canéda அருகே உள்ள கிராமபுற பகுதியில் தொழில் முனைவோரான எனாஷா (Enasha) ஒரு இடத்தை வாங்கினார்.
அதாவது, பிரான்சில் gite எனப்படும் கிராமபுற பகுதிகளில் அமைதியான முறை வாழ கட்டப்படும் காட்டேஜ் முறையிலான வீட்டையே அவர் 10 ஆண்டுகளாக கட்டியதோடு அதை தொடர்ந்து சீரமைத்து புதுப்பித்து வந்திருக்கிறார்.
இது ஒரு சுவாரசியமான கதையாகும், அதன்படி 25 ஆண்டுகளாக பார்க்காத ஒரு நண்பரை எனாஷா (Enasha) பார்த்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அவர்களுக்கு 11 வயதில் சேவியர் என்ற மகன் உள்ளான்.
தம்பதி சேர்ந்து தான் வீட்டை கட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016இல் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மீதமுள்ள வீட்டு வேலைகளை தனியாக செய்ய தொடங்கினார்.
இப்போது அந்த வீடு மிக அழகாக காட்சியளிக்கிறது. பசுமையான நிலப்பரப்புகளுடன் நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்ப இந்த இடம் ஒரு அருமையான புகலிடமாக உள்ளது.
இது தொடர்பில்எனாஷா (Enasha) கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த இடங்களில் வீடு வாங்குவதற்கு முன்னர் முதலில் தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டும்.
நான் பிரஞ்சில் சரளமாக பேசுவேன், ஆனால் இங்குள்ள பிரித்தானியர்களிடம் பேசவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரான்சுக்கு வரும் போதே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், நிறைய இடங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வரக்கூடாது.
உங்கள் வாழ்க்கை தரத்திற்காக இங்கு வந்தால், அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் எனாஷா (Enasha) தனது நண்பர்கள் உதவியுடன் டேட்டிங் செயலிகள் மூலம் தனக்கு ஏற்ற நபரை தேடி வருகிறார் என தெரியவந்துள்ளது.