வெளிநாட்டுக் கனவு சீர்குலைவு - நாடு கடத்தப்பட்ட 38 இலங்கையர்கள்

Immigration Sri Lankan Peoples France
By Vanan Jan 27, 2023 12:38 AM GMT
Report

பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட் ரீயூனியன் தீவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற நிலையில், கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் சென்ற நிலையில், கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்கள் நேற்று இரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

சட்டவிரோத குடியேறிகள்

 வெளிநாட்டுக் கனவு சீர்குலைவு - நாடு கடத்தப்பட்ட 38 இலங்கையர்கள் | France Repatriated 38 Srilankans Attempt Illegally

இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி 14 ஆம் திகதி சென்ற சட்டவிரோத குடியேறிகள் குழு, ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி 5 பணியாளர்களுடன் ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்று பயணத்தை ஆரம்பித்திருந்தது.

அதன் பின்னர் கடந்த டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம், பத்தலங்குண்டுவில் இருந்து 64 இலங்கையர்களை ஏற்றிய குறித்த படகு பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட டியாகோ கார்சியா தீவை நோக்கி பயணித்திருந்தது.

இவ்வாறு பயணம் செய்த சட்டவிரோத குடியேறிகள் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி பிரித்தானியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, திரும்பி அனுப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர் ஆட்கடத்தல் கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக குடியேறிகள் குழுவுடன் பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட ரீயூனியன் தீவுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் ஜனவரி 14 ஆம் திகதி ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

ரீயூனியன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்கள் நேற்று புதன்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

 சட்ட நடவடிக்கை

வெளிநாட்டுக் கனவு சீர்குலைவு - நாடு கடத்தப்பட்ட 38 இலங்கையர்கள் | France Repatriated 38 Srilankans Attempt Illegally

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய கற்பிட்டி மற்றும் கண்டி பகுதிகளில் உள்ள ஆட் கடத்தல்காரர்கள், ஒவ்வொரு நபரிடமிருந்து தலா 400,000 ரூபா முதல் 1,000,000 ரூபா வரை பணத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிகள் நுழைவதை பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிக்காது என்பதால், இதுபோன்ற மோசடிகளில் சிக்குவதை தவிர்க்குமாறும் சிரமப்பட்டு உழைத்த பணத்தை வீணடிக்காமல் இருக்குமாறும் சிறிலங்கா கடற்படை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

உடுத்துறை, வவுனியா, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, மெல்போன், Australia

13 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கனடா, Canada

14 Jan, 2015
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
மரண அறிவித்தல்

சில்லாலை, வெள்ளவத்தை, London, United Kingdom

02 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023