ஹோர்முஸில் தற்காப்பு'நடவடிக்கையை தொடங்கவுள்ள பிரான்ஸ்
பதற்றமான சூழ்நிலைகள் சீரடைந்தவுடன் ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காப்பு சர்வதேச கடல்சார் பணி தொடங்கப்படும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஹோர்முஸ் முற்றுகை நிறுத்தப்பட வேண்டும், அது கைவிடப்பட வேண்டும். எந்தவொரு மிரட்டலோ, முற்றுகையோ, அல்லது நீரிணை மீது சுங்க வரியோ விதிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீரிணைகள் சர்வதேச சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன என்றும், "எந்தச் சூழ்நிலையிலும் அவற்றுக்குத் தடை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் கடுமையாக உணரப்படும் எரிபொருள் விலை உயர்வானது, ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்றும், அவர் விளக்கியுள்ளார்.

இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாலும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாலும் பிரான்ஸ் அதனைக் கண்டித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening