இணைய வழி மூலம் பெருந்தொகை மோசடி! அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்
இணைய வழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, 4,386,219 ரூபாய் பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகநூல் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இவ்வாறு ஏமாற்றப்பட்ட மொத்தத் தொகையில் 500,000 ரூபாயை அவர் தனது சொந்தத் தேவைக்காகத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |