விவசாயிகளுக்கான உர மானியம் : அநுர அரசை சாடும் எதிர்க்கட்சி
விவசாயிகளுக்கு இன்னமும் உர மானியம் சரியாக வழங்கப்படவில்லை எனவும் தரம் குறைந்த உரங்களும் தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சாட்டியுள்ளார்.
ஹொரவப்பதான தேர்தல் தொகுதியில் நேற்று (28.02.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தொரிவித்த எதிர்கட்சி தலைவர், “அரச அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் இன்று விவசாயியை மறந்துவிட்டு செயற்பட்டு வருகின்றனர்.
உர மானியம்
இதன் காரணமாக, ஒரு ஏக்கரில் கிடைக்கும் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. நியாயமான உத்தரவாத விலை இன்னும் கிடைத்தபாடில்லை. ரூ.120 உத்தரவாத விலையானது போதுமானதாக இல்லை.
அரசாங்கத்தினால் இன்னமும் உர மானியம் சரியாக வழங்கப்படவில்லை, ரூ.120 உத்தரவாத விலையானது போதுமானதாக இல்லை. நெல் கொள்வனவு செய்ய 5000 மில்லியன் ரூபா குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொய் சொன்ன தற்போதைய அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
விவசாயியை ஏமாற்றி இந்த அரசாங்கத்திற்கு அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
