பூனைக்குட்டிகளைத் தத்தெடுத்தால் இலவச விமானப் பயணம்!
பூனைக்குட்டிகளைத் தத்தெடுப்பவர்களுக்கு இலவச விமானப் பயணத்தை வழங்குவதாக அமெரிக்காவின் Frontier Airlines விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகஸ் விலங்கு அறக்கட்டளையிலிருந்து ஸ்பிரிட் (Spirit), டெல்டா (Delta), ஃபிரான்டியர் (Frontier) எனும் பூனைக்குட்டிகளைத் தத்தெடுப்பவர்களுக்கு இலவசப் பற்றுச்சீட்டுகளைத் தருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பூனைக்குட்டிக்கும் ஒவ்வொரு விமான நிறுவனங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
250 அமெரிக்க டொலர்
ஸ்பிரிட் அல்லது டெல்டாவைத் தத்தெடுப்போருக்கு 250 அமெரிக்க டொலர் மதிப்புடைய 2 விமான பயண பற்றுச்சீட்டுக்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிரான்டியரைத் தத்தெடுப்பவருக்கு 250 அமெரிக்க டொலர் மதிப்புடைய 4 விமான பயண பற்றுச்சீட்டுக்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை, இந்த ஆண்டின் இறுதிவரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பற்றுச்சீட்டுக்களை பரிசாக
Frontier Airlines, பயண பற்றுச்சீட்டுக்களை பரிசாக வழங்குவதற்கான அதன் முடிவை விளக்கும் ஒரு அறிக்கையில்,
"இந்த மூன்று அபிமான பூனைகளுக்கு விமான நிறுவனங்களின் பெயரை பெயரிட முடிவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.
இந்த மூன்று விலையுயர்ந்த பூனைக்குட்டிகளை தத்தெடுப்பதை ஊக்குவிப்பதற்காக சிறிது கூடுதல் ஊக்கத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Frontier Airlines is offering free flights to the adopters of three adorable kittens living at the Las Vegas Animal Foundation. https://t.co/BamM14E9KH
— ABC 7 Chicago (@ABC7Chicago) January 8, 2023


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
