ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் விடுவியுங்கள்! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தொடரும் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போர் (Iran War) தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்து கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
"ஈரான், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகவும், எந்த அச்சுறுத்தலும் இன்றியும் திறக்காவிட்டால், இன்னும் 48 மணி நேரத்திற்குள் , அமெரிக்கா ஈரானின் பல்வேறு மின் நிலையங்களை தாக்கி அழிக்கும்.
மிகப்பெரிய மின் நிலையத்திலிருந்து தொடங்கி!" என குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் போக்குவரத்து
"இந்த அச்சுறுத்தல், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி வைத்திருப்பதால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்து, ஏற்றுமதி கப்பல்கள் தடைபடுவதால் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாகும் உலகின் சுமார் 20-25% எண்ணெய் இதன் வழியாக செல்கிறது.
சமீபத்திய சூழல்:ஈரான், எதிரி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி நீரிணையை மூடியுள்ளது. பல கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ராணுவ இலக்குகளை தொடர்ந்து தாக்கி வருகின்றன. டிரம்ப் முன்னதாக, நீரிணையை திறக்க பிற நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |