நாளை முதல் இலவச தொடருந்து சேவை : மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட தொடருந்து சேவைகளை இயக்குவற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய கொழும்பு (Colombo) கோட்டையில் இருந்து அனுராதபுரம் (Anuradhapura) வரை 20 தொடருந்து பயணங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை 36 தொடருந்து பயணங்களும் இயக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தொடருந்து திணைக்களம்
குறித்த தொடருந்து சேவைகள் அனைத்தும் ஒரு தனியார் நிறுவனத்தின் முழு நிதி ஆதரவுடன் இயக்கப்படுவதால், இந்த அனைத்து பயணங்களும் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த விசேட தொடருந்து சேவைகள் நாளை (09) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இயக்கப்படவுள்ளதாகவும், இதனுடன் இணைந்து தங்குமிட வசதிகள் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவதற்கும் அந்த திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்காக பல இடங்களில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வசதிகளை தொடருந்து நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        