கொழும்பிற்கு படையெடுக்கும் போர்க்கப்பல்கள்
Port of Colombo
Sri Lanka
France
By Sumithiran
பாகிஸ்தான், இந்தியாவைத் தொடர்ந்து பிரான்ஸ் கடற்படையின் கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
பிரான்ஸ் கடற்படை கப்பலான Dupuy de Lôme என்ற கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
Dupuy de Lôme கப்பலானது 102.40மீ நீளமுள்ள மின்காந்த ஆராய்ச்சிக் கப்பலாகும், இதில் 107 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர்.
சுற்றுலாத் தலங்களுக்கு
Dupuy de Lôme இன் குழுவினர் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளதுடன், குறித்த கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளது.
