வரலாற்றில் முதல் முறையாக பிரான்ஸ் அதிபர் சிறிலங்கா வருகை
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் நாளை (28) சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவிற்கு விஜயம் செய்துள்ள இமானுவேல் மக்ரோன், அங்கிருந்து திரும்பும் போது சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் ஒருவர் சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
எனவே இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புதிய மாற்றங்களை உருவாக்கலாம்
இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் அதிபர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் அதிபரின் விஜயம் சிறிலங்காவில் புதிய மாற்றங்களை உருவாக்கலாம் என பலதரப்பட்டோரால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்த நாடுகளின் குழுவில் பிரான்ஸ் நாடு அடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.