காசாவில் போர்நிறுத்தம் : பிரான்ஸ் அதிபர் வரவேற்பு
காசாவில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த நிலையில் அதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
மனிதாபிமான போர்நிறுத்தம்
காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை வரவேற்கிறேன்.
I welcome the announcement of an agreement for the release of hostages and a humanitarian truce.
— Emmanuel Macron (@EmmanuelMacron) November 22, 2023
We are working tirelessly to release all hostages.
The humanitarian truce announced should allow to introduce aid and rescue the civilians in Gaza.
அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க அயராது உழைத்து வருகிறோம். காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்க மனிதாபிமான போர் நிறுத்தம் உதவிகரமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |