இலங்கையில் கால்பதிக்கிறது பிரான்ஸ்
Ranil Wickremesinghe
Sri Lanka
Emmanuel Macron
France
By Sumithiran
இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறையின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபரின் இலங்கைக்கான விஜயத்தின் போது இடம்பெற்ற குறுகிய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபரின் உறுதிமொழி

இது தொடர்பில் அதிபரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, அதிபர் மக்ரோனுக்கு அறிவித்ததையடுத்து, பிரான்ஸ் அதிபர் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
கப்பல் துறையில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள பிரான்ஸ், இலங்கையில் முதலிட அந்நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகளை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி