மகிந்தவை இந்தியாவிற்கு அழைக்கப் போகிறேன்! சுப்ரமணியன் சுவாமி பகிரங்க தகவல்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பாஜகவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், "எனது நண்பரும் இலங்கை தலைவருமான மகிந்த ராஜபக்சவை புதுடில்லியில் பொதுநிகழ்வொன்றில் உரையாற்றுவதற்காகவும், இந்து பௌத்த ஆலயங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்காகவும் அழைக்கவுள்ளேன்.
அவர் மழைக்காலத்திற்கு முன்னர் ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு வரமுடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்", என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
I have decided to invite my friend and Sri Lankan leader Mahinda Rajapaksha to visit India to address a public meeting in Delhi and visit Hindu and Buddhist temples. I hope he can come in June before the Monsoon
— Subramanian Swamy (@Swamy39) June 1, 2022
மகிந்தவின் நெருங்கிய நண்பர்
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் இல்லம் எரிக்கப்பட்டமைக்கும் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவுகளின் மூலம் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
