கொழும்பிலிருந்து யாழ். சென்ற பேருந்து காருடன் மோதி விபத்து - இருவர் படுகாயம்

Police Colombo Jaffna
By Vasanth Jan 22, 2021 12:22 PM GMT
Report

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காரொன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து நேற்று இரவு சுமார் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பேருந்து பயணிகளை இறக்கிய பின் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது, ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை கடந்த கார் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. விபத்தில் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் மற்றும் அருகிலிருந்த பேருந்து தரிப்பு நிலையம், ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு என்பனவும் சேதமடைந்துள்ளன.

இதனால் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரும் தலையில் கடும் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பேருந்து மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர்கள் அலுவலக விடயமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த காரில் பயணித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி