கியூ.ஆர் அட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாட்டு மக்களுக்கு கஞ்சன விஜேசேகர வெளியிட்ட அறிவித்தல்
காவல் நிலையத்தில் பதிவு
முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான காவல்துறை நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச செயலகங்களில் பதிவு
1) FuelPass Update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 26, 2022
Request all 3Wheel users to register their 3Wheelers at their respective area Police Station & nominate 1 Fuel Station before the 31st July. From the 1st of August 3Wheelers will only be allowed to obtain fuel from the their registered Fuel Station.
விவசாய உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன்படுத்துபவர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும்.
தங்களது வாராந்த எரிபொருள் தேவை தொடர்பான தகவல்களுடன் இவ்வாறு பதிவு செய்து ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
செஸி எனப்படும் அடிச்சட்ட இலக்கம் மூலம் QR முறைமையை பதிவு செய்ய முடியாத வாகன பயனர்கள், வெள்ளிக்கிழமை முதல் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி பதிவு செய்ய முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
