அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த திட்டம்
Twitter
Sri Lankan Peoples
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Vanan
எரிபொருள் இறக்குமதி கட்டுப்பாடு
அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவொன்றில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமோ அல்லது லங்கா ஐஓசி நிறுவனமோ, ஒருபோதும், ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் தினமும் எரிபொருளை விநியோகித்ததில்லை.
வரம்பற்ற கையிருப்பு
வரம்பற்ற கையிருப்பு இருந்த காலத்தில் கூட அது நடைமுறை சாத்தியமாய் இருக்கவில்லை.
நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினாலேயே எரிபொருள் அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது கியூ.ஆர் திட்டம்..! வெளியான ஊடக அறிக்கை |
