இன்று முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம்..!நாட்டு மக்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சி தகவல்
எரிபொருள் விநியோகம்
இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.
பரீட்சார்த்தமான முறையில் QR குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்கும் நடைமுறை வெற்றியளித்துள்ளது எனவும் இதன் காரணமாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சார்த்த நடைமுறையின் கீழ் 4,708 வாகனங்கள்
Fuel Pass QR was successfully tested at 20 locations islandwide on 4708 vehicles. CPC was scheduled to test at 25 locations. Due to non placement of orders, delays in placing orders & delays in delivery, the 5 locations that was not tested will be tested in the next 2 days. pic.twitter.com/fdgOmB61b4
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 24, 2022
பரீட்சார்த்த நடைமுறையின் கீழ் 4,708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழிவகைகள் செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.
அதேவேளை QR குறியீட்டினை பெறாதவர்கள் வீணாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
QR குறியீட்டை பதிவு செய்யும் வாகனங்களுக்கு இன்று வாகன பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் படி எரிபொருள் வழங்கப்படும்.
வாகன எண்ணின் கடைசி இலக்கத்தின் படி விநியோகம்
வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0-1 அல்லது 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், கடைசி எண்கள் 3-4-5 ஆகவும், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கடைசி எண்கள் 6-7-8-9 ஆகவும் இருந்தால். , திங்கள்-புதன்-வெள்ளிக்கிழமைகளில் இருந்து எரிபொருளைப் பெறலாம்.
தற்போது, மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த உரிமத்தின் கீழ் எரிபொருள் பெற பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்