எரிபொருள் நெருக்கடி : நாளாந்தம் பழுதடையும் 50,000 கிலோ மரக்கறிகள்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் கிலோ கிராம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் பழுதடைவதாக தேசிய மரக்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாட்டால் மொத்த வியாபாரிகள் சந்தைக்கு வருகை தர முடியாதமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலுள்ள 13 விசேட பொருளாதார நிலையங்களுக்கு சுமார் 3 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் தமது விளைச்சலை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் கிடைக்காத காரணம்
அதற்கமைய, நேற்று (29) மாத்திரம் சுமார் 20 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் சந்தைக்கு கிடைத்த போதிலும் வியாபாரிகள் வருகை தரதாத காரணத்தினால் போட்டித் தன்மை குறைந்து மரக்கறி விலைகளும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பாரவூர்தி உரிமையாளர்களுக்கு வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் டீசல் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் சந்தைகளுக்கு வருகை தருவதை தவிர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், மரக்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு அவை பழுதடைவதாகவும் நிமல் ஹேவாவிதாரண சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |