நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை : அடித்துக்கூறும் அநுர தரப்பு
நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு சிலர் மாயவிம்பத்தை ஏற்படுத்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் (Karunananthan Ilankumaran) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சியினர் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டு மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்க முயற்சி செய்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் (Jaffna) உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் முன்னைய காலங்களில் எரிபொருள் வழங்குநர்களுக்கு 3 வீதமான தரகுப்பணத்தை வழங்கி வந்த கடந்த அரசின் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் குறைத்துள்ள நிலையில் வழங்குநர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கப்போகின்றோம் என்ற கருத்தை வெளியிட்ட நிலையில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு நுகர்வு அதிகரித்திருந்தமையே இதற்கான காரணம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தப் பிரச்சினையை நாங்கள் சுமுகமாக தீர்ப்போம் எனவும் நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் உறுதியாகக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
