எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதியில் தலையிடும் ராஜபக்சவினர்: பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர்
எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி
எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி நடவடிக்கைகளில் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் கடும் தலையீடுகளை மேற்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 43வது படைப்பிரிவு அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டும் போதே இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் இந்த தலையீட்டை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நட்பு நாடுகளுடன் வெளிப்படைத்தன்மை
பல்வேறு இடங்களில் பல விதங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, இலங்கைக்குள் உரிய முறையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் ஊடாக அதனை செய்ய வேண்டும்.
நட்பு நாடுகளுடன் வெளிப்படைத்தன்மையாக இதனை முன்னெடுக்க வேண்டும் இதில் ராஜபக்ச குடும்பத்தினர் தலையிடக் கூடாது எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.