எரிபொருள் விநியோகம் - ஓகஸ்ட் மாதம் முதல் இறுக்கமான நடைமுறை
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Vanan
QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருள் விநியோகம்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருளை விநியோகிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுபோக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கும் அளவு தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் கைமாற்றம்
அதேநேரம், கடந்த நாட்களில் வாகன இலக்கதகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய இன்றைய தினமும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
இதன்படி, நேற்று வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களான 3, 4 மற்றும் ஐந்து ஆகிய இலக்கங்களுக்கே எரிபொருள் வழங்கப்பட்டதுடன், இன்ற 6,7,8,9 இலக்கங்களுக்கே விநியோகிக்கப்படவுள்ளது.
