எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!
இலங்கை வந்துள்ள சூப்பர் டீசல் கப்பலில் இருந்து சூப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று தரையிறக்கப்பட இருந்த சூப்பர் டீசல் தொகை வங்கி நடவடிக்கைகளின் தாமதம் காரணமாக தரையிறக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மற்றுமோர் டீசல் கப்பல்
இதேவேளை, மற்றொரு டீசல் கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ள நிலையில் நாளை காலை தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாமதமான எரிபொருள் விநியோகத்தை ஈடுகட்ட இரவு நேர விநியோகமும் இடம்பெறும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
There was a delay in unloading the super diesel cargo yesterday due to bank clearances & discharging has commenced an hour ago. Auto Diesel cargo arriving tonight will commence unloading tomorrow. CPSTL Distribution will continue during the night today to make up for the delays.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 25, 2022