லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்
ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் (Litro Gas Lanka LTD) அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோ கிராம் 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் 694 ரூபாவாகவும் விற்கப்படும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை
ஜூலை மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் (Laugfs Gas) எவ்வித மாற்றமும் இருக்காது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் (Niroshan J Peiris) தெரிவித்துள்ளார்.
இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில், ஏப்ரல் மாத விலை திருத்தத்தின் போது, 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரித்து 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை168 ரூபாவினால் அதிகரித்து 1,645 ரூபா ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாதாந்திர எரிபொருள் விலை
இதேவேளை, மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாக அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
