கியூ.ஆர் குறியீட்டை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
தேசிய எரிபொருள் பத்திரத்தைப் பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றவர்களுக்குத் தெரியும் இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும், வேறு யாரும் சட்டவிரோதமாக QR குறியீட்டை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யும் முகமாக பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் எனவும் குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Request users of the National Fuel Pass not to display the QR code anywhere visible to others. Keep it in a secure place to make sure no one else uses it illegally.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 4, 2022
The option to Delete a current profile feature is available now & the option to register again.
ஏரிசக்தி அமைச்சின் அறிவிப்பு
இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகாமையுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.