எரிபொருள் பாஸ் நடைமுறை - எரிசக்தி அமைச்சு வெளியிட்ட அறிவுறுத்தல்
இலத்திரனியல் எரிபொருள் குறியீட்டு நடைமுறை
இலங்கையில் இலத்திரனியல் எரிபொருள் குறியீட்டு நடைமுறைக்கு பதிவு செய்ய முடியாத வாகனங்களை நாளை முதல் வருவாய் உரிம எண்ணுடன் பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோக நடைமுறை தொடர்பில் இன்று வெளியான அறிவுறுத்தலில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகளுக்கான பதிவு
இந்த நிலையில் அனைத்து முச்சக்கர வண்டிகளையும் அந்தந்த காவல் நிலையத்தில் பதிவு செய்யுமாறும் அவர்களுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை பரிந்துரைக்குமாறும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மின்பிறப்பாக்கிகள், தோட்டக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள், தேவையான எரிபொருள் வகை, வாராந்திர எரிபொருள் தேவை மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தேர்வு ஆகியவற்றை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
வணிக நிறுவனங்கள்
பல வாகனங்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள் அனைத்து வாகனங்களையும் தங்கள் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அவசர நோயாளர் காவுவண்டி
அதேவேளை அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அவசர நோயாளர் காவுவண்டி சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளது.
